கடலூர் அருகே காணாமல் போன 2 சிறுமிகள் திருவண்ணாமலையில் மீட்பு
- பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு பகுதியை சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தோழி 15 வயது சிறுமி. இருவரையும் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் 2 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததால் ஊரை விட்டு சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டு 2 சிறுமிகள் சென்றதாக போலீசாருக்கு தெரியவந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாதென சிறுமிகளிடம் அறிவுரை கூறிய போலீசார், அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.