- சேலத்தில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் செவ்வாய்ப்பேட்டை சந்தை பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும், சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த நபர் வாகனத்தை விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த போலீசார், அங்கு சென்று சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் 400 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்ட றியப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோவை ஓட்டி வந்தது பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாப்பட்டி ஏரி பகுதியில் உள்ள புதருக்குள் ரேசன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது ஆட்டை யாம்பட்டி பகுதிைய சேர்ந்த சுப்பிரமணி (49) என்பவர் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஏரி புதருக்குள் பதுக்கி வைத்து கோழிப்பண்ணைக்கு கடத்தி விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர்.