உள்ளூர் செய்திகள்

தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிசு வழங்கிய காட்சி.

வங்கி கணக்கு மோசடி வழக்கில் 2 பேர் கைது : அம்பை இன்ஸ்பெக்டர், தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு

Published On 2022-12-08 09:46 GMT   |   Update On 2022-12-08 09:46 GMT
  • சிறப்பு காவல் படையை சேர்ந்த தளவாய் கார்த்திகேயன் என்ற அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவதுபோல் பரிசு கூப்பன் அனுப்பச் சொல்லி தகவல் அனுப்பி, அதன் மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
  • தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர்.

கல்லிடைக்குறிச்சி :

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல் படையை சேர்ந்த தளவாய் கார்த்திகேயன் என்ற அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவதுபோல் பரிசு கூப்பன் அனுப்பச் சொல்லி தகவல் அனுப்பி, அதன் மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கர்க், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆகியோரது உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இந்த வழக்கின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை இன்ஸ்பெக் டர்கள் சந்திரமோகன், ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஆகஸ்டு 23-ந் தேதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூரை சேர்ந்த முரளி(வயது 41), வினய்குமார்(35) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வழக்கிலும், இவ்வழக்கிலும் ஒரே மாதிரியாக மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவ்வழக்கில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தியதில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32), நைஜீரியாவை சேர்ந்த ஸ்டான்லி(40) ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து இம்மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று இருவ ரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்த னர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டு கள் மற்றும் ஏ.டி.எம். கார்டு கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அம்பாச முத்திரம் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் தனிப்படை போலீசாருக்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பாராட்டி பரிசு வழங்கினார்.

Tags:    

Similar News