கடலூர் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் 20 கூரை வீடுகள் எரிந்து நாசம்
- இந்தியா முழுவதும் தீப ஒளி திருநாளான தீபா வளி பண்டிைக நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது.
- பட்டாசுகள் வெடித்ததில் தீப்பொறி 20 கூரை வீடுகள் மீது விழுந்தது.
கடலூர்:
இந்தியா முழுவதும் தீப ஒளி திருநாளான தீபா வளி பண்டிைக நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதை யொட்டி சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். பட்டாசு விபத்துக்களை கண்காணிக்க கடலூர் மாவட்டத்தில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலு வலர் குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் உஷார் நிலையில் இருந்த னர். கடலூர் மாவட்டத்தில் 15 தீயணைப்பு நிலைய ங்கள் உள்ளது.
இதில் பணியா ற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை கண்கா ணித்தபடி இருந்தனர். என்றாலும் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், வேப்பூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், கடலூர் சிப்காட், சேத்தியா த்தோப்பு, பரங்கிப்பேட்ைட, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பே ட்டை, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட 20 இடங்களில் பட்டாசுகள் வெடித்ததில் தீப்பொறி 20 கூரை வீடுகள் மீது விழுந்தது. இதில் அந்த வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. தகவலறிந்த அந்தந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுதவிர 3 இடங்களில் கரும்பு தோ ட்டம் பட்டாசு தீ விபத்தில் எரிந்து சேதமானது. 2 இடங்களில் தென்னை மரம், ஒரு இடத்தில் வைக்கோல் போர், ஒரு இடத்தில் குளிர்சாதன பெட்டி எரிந்து நாசமானது.