ஊட்டியில் வீடுசேதமடைந்த ஏழை குடும்பங்களுக்கு 20 ஆயிரம் நிதி உதவி
- குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.
- ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் தொட்டகம்பை, சேரனூர், குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.
சேதமடைந்த வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
அவருடன் கீழ் குந்தா பேரூராட்சி செயலாளர் சிவராஜ், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பெள்ளி, சக்ஸஸ் சந்திரன், பாசறை பேரூராட்சி செயலாளர் ஜெயபிரகாஷ், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு பேரூராட்சி செயலாளர் சரவணன், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.