செய்திகள் (Tamil News)

தங்கம் விலை நிலவரம்: சவரன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது

Published On 2016-06-15 07:26 GMT   |   Update On 2016-06-15 07:26 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு சவரன் ரூ.22,976-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை ரூ.88 உயர்ந்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது.

கடந்த 3-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 808 ஆக இருந்தது. மறுநாள் (4-ந்தேதி) பவுனுக்கு 440 உயர்ந்து பவுன் 22 ஆயிரத்து 248 ஆனது.

இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்தை கடந்தது. அதை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் விலை இருந்து வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 920 ஆக இருந்தது. நேற்று ரூ.32 குறைந்து ரூ.22 ஆயிரத்து 888 ஆக விற்றது.

இன்று பவுனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976 ஆக உள்ளது. அதாவது பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.2872-க்கு விற்கிறது.

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து பவுன் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நடுத்தர மக்களை கவலை அடைய செய்துள்ளது. தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, சர்வதேச சந்தை விலை நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்து வருவதாக தெரிகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ 42 ஆயிரத்து 175 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.45.10-க்கு விற்கிறது.

Similar News