விருதுநகர்:
விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மனோ என்ற மாரிச்செல்வம் (வயது14). 9–ம் வகுப்பில் தோல்வியடைந்த இவன் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளான்.
இதனால் அவனை 10–ம் வகுப்பில் பெற்றோர் சேர்த்தனர். தொடர்ந்து கல்வி கட்டணம் செலுத்த ரூ.2500–ஐ தாய் கோமதி வீட்டின் மேஜையில் எடுத்து வைத்துள்ளார்.
அப்போது மனோ, வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். அதன்பின்னர் கோமதி, மேஜையில் இருந்த பணத்தை பார்த்தபோது அதில் ரூ.500 குறைவாக இருந்துள்ளது.
மகன் எடுத்து சென்றிருக்கலாம் என நினைத்த கோமதி மீதிப்பணத்தை எடுத்து கொண்டு கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக பள்ளிக்கு சென்றார். அங்கு மனோ பள்ளிக்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோமதி பல இடங்களிலும் மகனை தேடினார். ஆனால் மாயமான அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மனோ என்ற மாரிச்செல்வத்தை தேடி வருகிறார்.