செய்திகள் (Tamil News)

உடல்நலக்குறைவால் உயிரிழந்த 14 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: ஜெயலலிதா உத்தரவு

Published On 2016-06-29 06:56 GMT   |   Update On 2016-06-29 06:56 GMT
உடல்நலக்குறைவால் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

29.12.2015 அன்று விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்த ஆவுடையப்பன்;

12.3.2016 அன்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்த மு.சுப்பிரமணியன்;

20.3.2016 அன்று காஞ்சீபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த பாபு;

25.3.2016 அன்று சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை 2, புனித தோமையர் மலை, ஆ-நிறுமம், 5ம் அணியில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்த குமார்;

27.3.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சந்திரபாலன்;

தருமபுரி மாவட்டம், தருமபுரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வரதராசு;

30.3.2016 அன்று கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பஞ்சமூர்த்தி;

5.4.2016 அன்று இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஆறுமுகம்;

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சேகர்;

8.4.2016 அன்று இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த ராஜகோபால்;

திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரவி;

9.4.2016 அன்று சேலம் மாநகரம், செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சிவசங்கரன்;

12.4.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்த ராஜேந்திரன்;

17.4.2016 அன்று திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த முருகன்; ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Similar News