செய்திகள் (Tamil News)

வாடகை கார்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும்: போலீசார் அறிவுரை

Published On 2016-09-28 01:36 GMT   |   Update On 2016-09-28 01:36 GMT
வாடகை கார்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் எனவும் மேலும் பானிக் பட்டன் கருவியும் பொருத்த வேண்டும் என போலீசார் டிரைவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளனர்
சென்னை:

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாடகை கார் உரிமையாளர்களுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாடகை கார் உரிமையாளர்கள், மற்றும் டிரைவர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

* டிரைவர்களை வேலைக்கு சேர்க்கும் போது, அவர்களின் நன்னடத்தை பற்றி போலீசார் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். டிரைவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அடையாள அட்டையை டிரைவர்கள் கழுத்தில் தொங்க விட வேண்டும்.

* வாடகை கார்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும். மேலும் பானிக் பட்டன் கருவியும் பொருத்த வேண்டும்.

* பயணிகளை ஏற்றிச்செல்லும் போது, வாடகை கார்களில், அந்நிய நபர்களை நண்பர்கள் போர்வையில் டிரைவர்கள் ஏற்றிச் செல்லக்கூடாது.

இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Similar News