செய்திகள் (Tamil News)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Published On 2016-10-08 10:32 GMT   |   Update On 2016-10-08 10:32 GMT
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
சென்னை:

சென்னை தி.நகரில் அனுமதியின்றி வீடுகளை விடுதிகளாக மாற்றும் கட்டுமான பணி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புகார் தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் முடிவெடுக்கும்படி கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததையடுத்து சரவணன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தாவிட்டால் அரசுத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் என்றும், வழக்கு விசாரணை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும்  உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

Similar News