செய்திகள்

வேலூரில் புதிய கல்வி கொள்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Published On 2016-12-30 11:52 GMT   |   Update On 2016-12-30 11:52 GMT
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர் முத்தரப்பு சார்பில் புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் நுழைவு தேர்வு போன்றவைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர்:

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். திராவிட கழக வேலூர் மண்டல தலைவர் சடகோபன், செயலாளர் பஞ்சாட்சரம், மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர், ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் சங்கம், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News