செய்திகள்

வேலூரில் கம்யூனிஸ்டு சார்பில் பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Published On 2016-12-30 13:22 GMT   |   Update On 2016-12-30 13:22 GMT
வேலூரில் பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்:

இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யு.) வேலூர் மாவட்ட கம்யூனிஸ்டு சார்பில் பண மதிப்பு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது அனைத்து பகுதி மக்களையும் குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு வணிகர்கள் போன்றோரை மிகவும் சிரமடைய செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

வங்கிளுக்கு தங்கு தடையில்லாமல் பணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் காசிநாதன், பழனியப்பன், காசி, குப்பு, சுந்தரமூர்த்தி, சசீலா, காத்த வராயன், பாபு, சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News