செய்திகள் (Tamil News)

தேனி அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

Published On 2017-01-07 07:14 GMT   |   Update On 2017-01-07 07:14 GMT
தேனி அருகே மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

தேனி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் குமரவேல் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர் உள்ளனர்களா? என தீவிர சோதனை நடத்தப்பட்டு வந்தது.

கோம்பை பகுதியில் போலி டாக்டர் இருப்பதாக தகவல் வரவே அங்கு சென்று ஆய்வு நடத்தினர். பண்ணைபுரத்தில் கரியணம் பட்டி மேற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (68) என்பவர் முறையான மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்றபோது அவர் பயன்படுத்திய ஊசி, மருந்துகள் இருந்துள்ளது.

இது குறித்து குமரவேல் கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்து கிளினிக்கையும் பூட்டினர். இணை இயக்குனர் டாக்டர் குமரவேல் தெரிவிக்கையில்,

தேனி மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் இதுபோல் சிகிச்சை அளிப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.

Similar News