செய்திகள் (Tamil News)

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு சசிகலா பிறந்தநாள் வாழ்த்து

Published On 2017-01-14 18:42 GMT   |   Update On 2017-01-14 18:42 GMT
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

66-வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் பிறந்த நாளையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பன்னீர் செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News