செய்திகள் (Tamil News)

‘நீட்’, ‘நெஸ்ட்’ தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்

Published On 2017-02-01 06:46 GMT   |   Update On 2017-02-01 06:46 GMT
‘நீட்’, நெஸ்ட் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை, மருத்துவ கல்லூரி மாணவர்கள் இணைந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

சென்னை:

எம்.பி.பி.எஸ் படித்து முடித்து டாக்டர்கள் ‘நெஸ்ட்’ என்ற தகுதித்தேர்வு எழுத வேண்டும். அது போல பிளஸ் 2 முடித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.

இதற்கு நாடு முழுவதும் மருத்துவபடிப்பு படிக்கும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை, மருத்துவ கல்லூரி மாணவர்கள் இணைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்.

காலை 9.15 மணி முதல் 10.30 மணிவரை நடந்த போராட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்க மாநில் பொதுச்செயலாளர் டாக்டர் பி.பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ கழக தமிழக தலைவர் ரவிசங்கர், பொதுச் செயலாளர் முத்து ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் சங்கரநாராயணன், ஆணையப்பன், சுகந்தி, பிரபாகரன் சிங் உள்பட 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு கொண்டு வரும் ‘நெஸ்ட்’ , நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ஷ மிட்டனர்.

பின்னர் அரசு டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் பி. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் நெஸ்ட் என்ற ‘எக்ஸிட்’ தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும். என்று தமிழகம் முழுவதும அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கை நிறை வேறும் வரை போராட் டம் தொடரும்.

தமிழகத்தில் ‘நீட்’ தகுதித் தேர்வு நடத்த விதி விலக்கு அளிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களோடு சமச்சீர் பாடத்திட்டத்தில் படிக்கும் நம் மாணவர்கள் போட்டி போடமுடியாது.

‘நீட்’ தகுதி தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்ட சபையில் முதல்- அமைச்சர் மசோதா தாக்கல் செய்திருப்பதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News