செய்திகள் (Tamil News)

மாணவ பருவத்திலேயே மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும்: கரூர் கலெக்டர் அறிவுரை

Published On 2017-02-01 10:20 GMT   |   Update On 2017-02-01 10:20 GMT
மாணவ பருவத்திலேயே மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுரை வழங்கினார்.
கரூர்:

கரூர், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி விழா அரங்கில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பங்கேற்று தலைமையுரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

மனிதநேயம் என்பது தமிழர்களின் அடையாளம். அது தழைத்தோங்க வேண்டும். அதன் சிறப்புகளை எதிர்கால சந்ததியினருக்கு மனிதநேயம் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் ஜனவரி திங்களில் ஒரு வார காலத்திற்கு சாதி, சமய, வேறுபாடற்ற சிந்தனைகள் குறித்து மாணவ, மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்ளுடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட போதும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய சிந்தனையை வளர்த்து வருகிறார்கள்.

மாணவ, மாணவிகள் படிக்கும் வயதில் பள்ளி பருவத்திலேயே கல்வியோடு இணைந்து மதிப்பிட்டு கல்வியையும், நீதி போதனை சிந்தனைகளையும் வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Similar News