செய்திகள் (Tamil News)

பெரம்பலூரில் இலவச இருதய நோய் சிகிச்சை முகாம்

Published On 2017-02-01 14:38 GMT   |   Update On 2017-02-01 14:38 GMT
பெரம்பலூரில் லயன்ஸ் கிளப் மற்றும் திருச்சி காவேரிஹார்ட்சிட்டி சார்பில் இலவச இருதய நோய் சிகிச்சை முகாம் நடந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் லயன்ஸ் கிளப் மற்றும் திருச்சி காவேரிஹார்ட்சிட்டி சார்பில்  இலவச இருதய நோய் சிகிச்சை முகாம் நடந்தது. பெரம்பலூர் ஆர்.சி. பாத்திமா தொடக்கப் பள்ளியில் நடந்த இலவச இருதய நோய் சிகிச்சை முகாமிற்கு லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இரண்டாம் நிலை துணை ஆளுநர் ஷேக்தாவூத் முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் சாசன தலைவர் ராஜாராம் முகாமினை தொடங்கி வைத்தார்.

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை இருதய நோய் நிபுனர் அரவிந்த் குமார் தலைமையிலான மருத்துவகுழுவினர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.  மேலும் ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது.

முகாமில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சுவலி, மூச்சுதிணறல், படபடப்பு போன்ற பிரச்சனைக்குரியவர்கள் 510 பேர் கலந்துகொண்டனர். இதில் 39 பேர் இருதய அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் லயன்ஸ் கிளப் செயலாளர்கள் பாபு, மகாதேவன், பொருளாளர் முரளி மற்றும் பொறுப்பாளர்கள் சரவணன், சுகுமார், ஒஜீர், தைரியம், கேசவராஜசேகரன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.             

Similar News