செய்திகள் (Tamil News)

இந்தியாவிலேயே முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2017-04-01 03:07 GMT   |   Update On 2017-04-01 03:56 GMT
இந்தியாவிலேயே முதல் முறையாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினி ஒரு ஆண்டு பயிற்சியை நிறைவு செய்தார். அவருக்கு தர்மபுரியில் பணி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை (பிரித்திகா யாஷினி) உள்பட 1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி நடைபெற்றது. ஒரு ஆண்டுகாலம் நடைபெற்ற பயிற்சி நேற்று நிறைவுபெற்றது. நிறைவு விழாவில் சிலம்பாட்டம், கராத்தே, நெருப்பு விளையாட்டு உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இந்தியாவிலேயே முதல் முறையாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரிகள் உள்பட சக பயிற்சியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். போராடி பெற்ற பதவியை அவர் முழுமையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பிரித்திகா யாஷினிக்கு தர்மபுரியில் பணி வழங்கப்பட்டுள்ளது.

Similar News