செய்திகள் (Tamil News)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: சட்ட விழிப்புணர்வு அமைப்பு வலியுறுத்தல்

Published On 2017-05-11 12:47 GMT   |   Update On 2017-05-11 12:47 GMT
அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சட்ட விழிப்புணர்வு அமைப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரனிடம், சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மாநில தலைவர் சங்கர் கோரிக்கை மனு அளித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 10 சிமென்ட் ஆலைகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட கனிம சுரங்கங்களினால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்து, சுகாதாரம், நீர், நிலம், காற்று மாசடைந்து வருகிறது.

இந்நிலையில்,அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இது குறித்து, அரியலூர் மாவட்ட மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்கமோ கருத்தோ கேட்கப்படவில்லை.

எனவே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால், மக்கள் வாழத்தகுதியற்ற மாவட்டமாக மாறிவிடும். எனவே ஹைட்ரோ கார்பன் பணிகளை உடனே தடை செய்ய உத்தரவிட வேண்டும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News