செய்திகள் (Tamil News)

போடி அருகே தொழில் போட்டியில் வாலிபரை தாக்கிய கும்பல்

Published On 2018-05-05 10:30 GMT   |   Update On 2018-05-05 10:30 GMT
போடி அருகே தொழில் போட்டியில் வாலிபரை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி:

போடி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 26). இவர் மீன்கடை வைத்து நடத்தி வருகிறார். போடியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரும் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். மீன் காண்டிராக்ட் எடுப்பதில் கவுதமுக்கும், நடராஜூக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது தொடர்பான வழக்கு போடி டவுன் போலீசில் உள்ளது. சம்பவத்தன்று கவுதம் வீரபாண்டி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு போடிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

தீர்த்தப்பட்டி அருகே வரும் போது எதிரே திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது. இதில் நிலை தடுமாறி கவுதம் கீழே விழுந்தார். அப்போது அங்கு வந்த நடராஜ், கரிகாலன், பாண்டி, மணிபாரதி, ராகுல் மற்றும் ஒருவர் ஆகியோர் சேர்ந்து கவுதமை தாக்கி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த கவுதம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறித்து கவுதம் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபரை தாக்கிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News