செய்திகள்

திருப்பூரில் அரசு பஸ் மோதி பனியன் கம்பெனி ஊழியர் பலி

Published On 2018-05-21 12:00 GMT   |   Update On 2018-05-21 12:00 GMT
திருப்பூரில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அரசு பஸ் மோதி பனியன் கம்பெனி சூப்பர் வைசர் பலியானார்.

திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் கார்த்திக் (27). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை 10.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். திருப்பூர் வலம்பாலம் என்ற இடத்தில் சென்ற போது சேலத்தில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் வந்தது. இதனை மேட்டூரை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டி வந்தார். இந்த பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் கார்த்திக் பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பலியானார். இதனால் அப்பகுதி பொதுக்கள் ஆத்திரம் அடைந்தனர். அங்கு 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் பஸ்சை முற்றுகையிட்டனர். டிரைவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு உருவானது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் பஸ் மோதி பலியான சூப்பர் வைசர் கார்த்திக் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் முருகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News