செய்திகள்

ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு 12-ந்தேதி கலந்தாய்வு

Published On 2018-06-03 07:25 GMT   |   Update On 2018-06-03 07:25 GMT
அரசு பள்ளி ஆசிரியர்கள் இட மாறுதலுக்கான கலந்தாய்வு வருகிற 12-ந் தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை:

தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இது குறித்து பள்ளிகல்வித்துறை அறிவிபு வெளியிட்டுள்ளது.

அதில் ஆசிரியர்கள் இட மாறுதலுக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) வருகிற 12-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் தலைமை கல்வி அலுவலகங்களில் வருகிற 7-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இடமாறுதல் பல பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது. மாவட்டங்களுக்குள்ளான இடமாறுதல்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்துவார்கள். மாவட்டங்களுக்கு இடையேயான இடமாறுதல்களை முதன்மை கல்வி அதிகாரி நடத்துவார். நிர்வாக ரீதியில் மாவட்டங்களுக்கு இடையேயான இடமாறுதல்களை கல்வித்துறை இணை இயக்குனர் நடத்துவார்.

இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்காக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கலந்தாய்வு மே மாதம் கோடை விடுமுறையின் போது நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கால தாமதமாகியுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. இது ஜூன் மாதம் முழுவதும் நடைபெறும்.

இதனால் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படும். என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என பல ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன. இதனால் வகுப்புகள் தொடங்கிய நிலையில் ஆசிரியர்கள் இடம் மாறி சென்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News