செய்திகள்

வடசென்னை காங். நிர்வாகிகளுடன் டெல்லியில் நாளை ராகுல் ஆலோசனை

Published On 2018-06-07 10:17 GMT   |   Update On 2018-06-07 10:17 GMT
காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியலில் வடசென்னையும் இருப்பதால், அந்த தொகுதி நிர்வாகிகளை ஆலோசனை நடத்துவதற்கு டெல்லி வருமாறு ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். #RahulGandhi #Congress
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த ராகுல்காந்தி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதில் ஒன்று இந்தியா முழுவதும் 300 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளின் நிலவரங்களை கள ஆய்வு செய்து வருகிறார்.

இந்த 300 தொகுதிகளையும் பரவலாக ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதி வாரியாக பார்த்து தேர்வு செய்துள்ளார். அவரது தேர்வு பட்டியலில் வடசென்னை பாராளுமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 300 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளையும் தொகுதி வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நாளை வட சென்னை தொகுதி நிர்வாகிகளையும் தொகுதி வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நாளை வடசென்னை தொகுதி நிர்வாகிகளை அழைத்திருக்கிறார்.

மாவட்ட தலைவர் திரவியம், வட்டார தலைவர்கள் ஜெய்சங்கர். சக்தி நாகேந்திரன், நஜிமாசெரீப், சையத், சீமான் செல்வராஜ், மூர்த்தி, அருள், கோதண்டம், நிசார். நிலவன், ரவிகுமார், பாஸ்கர் ஆகியோரையும் அழைத்துள்ளார்.

பொதுவாக மாவட்ட தலைவர்கள் மட்டத்தில்தான் ராகுல்காந்தி நேரடியாக பேசுவார். முதல் முறையாக கீழ்மட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசுகிறார். இதற்கு காரணம் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் நிலவரம் தெரியும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இந்த ஆலோசனையின்போது தொகுதியில் காங்கிரசுக்கு இருக்கும் செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு விவரங்களை கேட்டறிந்து, கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் குறிப்பிட்ட தொகுதியை கூட்டணி கட்சிகளிடம் கேட்டு பெறவும் ஆலோசனை வழங்கி வருகிறார். #RahulGandhi #Congress
Tags:    

Similar News