செய்திகள் (Tamil News)

தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது- திருநாவுக்கரசர் அறிக்கை

Published On 2018-06-08 08:04 GMT   |   Update On 2018-06-08 08:04 GMT
தமிழகத்தில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாகவும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாகவும் அனைத்து தொழில்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.

201718 -ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் பெருமளவு சரிந்துள்ளது.

இதனால் வேலை வாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இந்த கொள்கை விளக்க குறிப்பின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

தமிழகத்தின் தொழில் முதலீடுகள் 2015 -ம் ஆண்டு முதலே குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடு வெறும் 0.8 சதவீதம் தான். முதல் 10 இடங்களைப் பெற்ற மாநிலங்களில் தமிழகம் இல்லை.

ஹுன்டாய் மோட்டார் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது உற்பத்தி பிரிவை தொடங்க முயற்சி எடுத்தது. அது தொடர்பாக ஆட்சியாளர்களோடு பேசியதில் அவர்கள் கூறிய நிபந்தனைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்நிறுவனம் ஆந்திராவிற்கு போகிற நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar
Tags:    

Similar News