செய்திகள் (Tamil News)

கமுதி-மண்டலமாணிக்கம்-வீரசோழன் பகுதிகளில் வழிப்பறி தொல்லை

Published On 2018-07-28 10:01 GMT   |   Update On 2018-07-28 10:01 GMT
கமுதி, மண்டலமாணிக்கம், வீரசோழன், கீழராமநதி பகுதிகளில் வழிப்பறி தொல்லைகளால் பெண்கள் உள்பட பொது மக்கள் அச்சத்தில் நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளது. #Robberycase

கமுதி:

கமுதியில் இருந்து கீழராமநதி வழியாக ராமசாமி பட்டி கிராமத்திற்கும், மண்டலமாணிக்கம் வழியாக திருச்சுழிக்கும் எழுவனூர் வழியாக வீரசோழனுக்கும் செல்லும் ரோட்டில் மாலை 4 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களிலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், மாணவ-மாணவிகள், செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திடீர், திடீரென மோட்டார் சைக்கிளில் 2 அல்லது 3 நபர்கள் வந்து வழி மறித்து நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் ரோடுகளில் நடப்பதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் வயலுக்கு சென்று விவ சாயப்பணிகள செய்ய முடியவில்லை.

கமுதி, மண்டலமாணிக்கம், வீரசோழன் பகுதிகளில் வழிப்பறி செய்யும் மர்ம நபர்கள், இந்தப்பகுதி 3 மாவட்டங்களின் எல்லையாக இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் எளிதாக தப்பிச்சென்று விடுகின்றனர்.

பொதுமக்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றால் கூட வழிப்பறி செய்பவர்கள் பறித்துச் சென்று விடுகின்றனர்.

எனவே வழிப்பறி செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#Robberycase

Tags:    

Similar News