செய்திகள்
கச்சிராயப்பாளையம் இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்: காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்
கச்சிராயப்பாளையம் அருகே திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை, காதலன் நண்பர்களுக்கு விருந்தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கச்சிராயப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள வடக்கனந்தல் காமராஜர் நகரை சேர்ந்தவர் அழகப்பிள்ளை. விவசாயி. இவரது மகள் அமராவதி (வயது 20). இவர் டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (28). இவருக்கும், அமராவதிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். அப்போது அமராவதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் குணசேகரனிடம் கூறினார். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
கடந்த 28-ந்தேதி இரவு அமராவதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் அமராவதி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கச்சிராயப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர்.
பின்னர் போலீசார் விசாரணையில் அமராவதியை அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் காதலித்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் குணசேகரனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அமராவதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த நான் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து பிணத்தை அருகில் உள்ள கிணற்றில் வீசினேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் குணசேகரனை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி ஆகியோர் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் வந்தனர்.
அங்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த குணசேகரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குணசேகரன் தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தகவல் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி குணசேகரனிடம் அமராவதி அடிக்கடி வற்புறுத்தினார். ஆனால், குணசேகரன் தனக்கு வேலை எதுவும் இல்லை. கையில் பணமும் இல்லை. அதனால் இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.
ஆனால், அமராவதி இதனை ஏற்க மறுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தினார். குணசேகரன் ஆத்திரம் அடைந்தார். இதனால் காதலி அமராவதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
கடந்த 28-ந் தேதி மாலை அவர்கள் அங்குள்ள தென்னந்தோப்புக்கு சென்று மது குடித்தனர். அப்போது இரவு 8 மணியளவில் அமராவதி செல்போனில் குணசேகரனுடன் பேசினார். அப்போது உன்னிடம் திருமணம் சம்பந்தமாக பேச வேண்டியுள்ளது. எனவே உடனே அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு வா என்று கூறி அழைத்தார்.
இதை நம்பிய அமராவதி அங்கு சென்றார். மேலும் அவர் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் எடுத்து சென்றார். அப்போது போதையில் இருந்த குணசேகரன், அமராவதியை வற்புறுத்தி கற்பழித்தார். அப்போது அருகில் இருந்த நண்பர்கள் நாங்களும் அமராவதியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டனர்.
உடனே குணசேகரன், தனது காதலியிடம், தனது நண்பர்களுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அமராவதி இதற்கு சம்மதிக்கவில்லை. இதனை தொடர்ந்து கோமுகிதாசன், ரட்சகன் ஆகியோரும் அமராவதியுடன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்தார்.
பின்னர் அவர்கள் அமராவதியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கீழே தள்ளி கொலை செய்தனர். அதன் பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக அமராவதியின் உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குணசேகரனின் நண்பர்கள் ரட்சகன், கோமுகிதாசன் மற்றும் பிளஸ்-1 மாணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே அமராவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து அமராவதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள வடக்கனந்தல் காமராஜர் நகரை சேர்ந்தவர் அழகப்பிள்ளை. விவசாயி. இவரது மகள் அமராவதி (வயது 20). இவர் டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (28). இவருக்கும், அமராவதிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். அப்போது அமராவதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் குணசேகரனிடம் கூறினார். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
கடந்த 28-ந்தேதி இரவு அமராவதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் அமராவதி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கச்சிராயப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர்.
பின்னர் போலீசார் விசாரணையில் அமராவதியை அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் காதலித்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் குணசேகரனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அமராவதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த நான் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து பிணத்தை அருகில் உள்ள கிணற்றில் வீசினேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் குணசேகரனை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி ஆகியோர் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் வந்தனர்.
அங்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த குணசேகரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குணசேகரன் தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தகவல் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி குணசேகரனிடம் அமராவதி அடிக்கடி வற்புறுத்தினார். ஆனால், குணசேகரன் தனக்கு வேலை எதுவும் இல்லை. கையில் பணமும் இல்லை. அதனால் இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.
ஆனால், அமராவதி இதனை ஏற்க மறுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தினார். குணசேகரன் ஆத்திரம் அடைந்தார். இதனால் காதலி அமராவதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான ரட்சகன் (23), கோமுகிதாசன் (22) மற்றும் பிளஸ்-1 மாணவர் ஒருவர் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் அமராவதியை கொலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.