செய்திகள்

வத்தலக்குண்டுவில் டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர்

Published On 2018-08-22 10:44 GMT   |   Update On 2018-08-22 10:44 GMT
வத்தலக்குண்டு அருகே டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு பஸ் நிலையம் பின்புறம் காந்தி நகர் மெயின் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35), கார் டிரைவர். மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே விருதுநகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பிரபு (40). காரில் வந்து கொண்டு இருந்தார். போக்குவரத்து நெரிசலால் மோட்டார் சைக்கிள் கார் மீது லேசாக உரசியது. இதனால் பிரபு ஆத்திரமடைந்து மணிகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்பு தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவதாக மணிகண்டனை மிரட்டியுள்ளார். திடீரென பிரபு துப்பாக்கியை எடுத்ததால் மணிகண்டன் உள்பட பொதுமக்கள் அலறியடித்து சாலையில் ஓடினர்.

இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காந்தி நகர் பகுதியில் ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர். எனவே போலீசார் இந்த சாலையில் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News