செய்திகள்

பெட்ரோல் விலை 83 ரூபாயை எட்டுகிறது - டீசல் விலை 22 காசுகள் அதிகரிப்பு

Published On 2018-09-06 05:38 GMT   |   Update On 2018-09-06 05:38 GMT
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.62-க்கு விற்பனை செய்யப்படுவதையொட்டி பெட்ரோல் விலை 83 ரூபாயை நெருங்குகிறது. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது. #PetrolDiesel
சென்னை:

பெட்ரோல்-டீசல் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்தபடியே உள்ளது.

கடந்த 3-ந்தேதி பெட்ரோல் லிட்டர் ரூ.82.24-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 17 காசு அதிகரித்து 82.41 ஆக உயர்ந்தது. நேற்றும் அதே விலையில் நீடித்தது.



இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசு அதிகரித்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.62-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை 83 ரூபாயை நெருங்குகிறது.

இதே போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி 1 லிட்டர் டீசல் ரூ.75.19-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 20 காசு அதிகரித்து ரூ.75.39 ஆக உயர்ந்தது. நேற்றும் அதே விலையில் நீடித்தது.

இன்று டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது. இன்று 1 லிட்டர் டீசல் ரூ.75.61-க்கு விற்கப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். #PetrolDiesel

Tags:    

Similar News