செய்திகள்

மெட்ரோ ரெயில்களில் விரைவில் வை-பை வசதி

Published On 2018-09-06 08:00 GMT   |   Update On 2018-09-06 08:00 GMT
சென்னை மெட்ரோ ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் ‘வை-பை’ வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #metrotrain #Chennai
சென்னை:

சென்னை நகரில் துரித போக்குவரத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு வழித்தடத்தில் சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக மீனம் பாக்கத்துக்கும், மற்றொரு வழித்தடத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ். வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் டி.எம்.எஸ். - சென்ட்ரல் இணைக்கப்பட்டதும் இந்த திட்டம் நிறைவு பெறும்.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகள், இணைப்பு வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளு, குளு வசதியுடன் ரெயிலில் பயணம் செய்ய முடிகிறது. விரைவில் மெட்ரோ ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் ‘வை-பை’ வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.



இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காத்திருக்கும் போதும் அல்லது பயணம் செய்யும் போதும் தங்களது ஆன்ட் ராய்டு செல்போனில் ‘வை-பை’ இணைப்பு மூலம் ‘செயலி’யை பதிவிறக்கம் செய்து சினிமா படங்கள், பாடல்கள், டி.வி.நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டே பயணம் செய்யலாம்.

இதற்காக தனியாக ‘செயலி’யை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல 45 நிமிடம் ஆகிறது. இந்த நேரத்தில் இந்த செயலி மூலம் எச்.டி. தரத்துடன் கூடிய போழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #metrotrain #Chennai
Tags:    

Similar News