செய்திகள்

தமிழக முதல்வராக காமராஜரின் தொண்டர் வர வேண்டும் - திருநாவுக்கரசர் பேச்சு

Published On 2018-09-19 08:51 GMT   |   Update On 2018-09-19 08:51 GMT
தமிழக முதல்வராக காமராஜரின் தொண்டர் வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress

போரூர்:

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் திருமங்கலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடை பெற்றது.

கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நமது கட்சியில் இதுவரை 28 லட்சம் உறுப்பினர்களை நாம் சேர்த்துள்ளோம்.

வெகு விரைவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 50 லட்சமாக உயர வேண்டும் இந்தியாவிலேயே ஜாதி மதம் இல்லாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும் தான். மத்தியில் மோடி தலைமையில் நடைபெறுகின்ற காவி ஆட்சியையும் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. ஆவி ஆட்சியையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து கிடப்பதால் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான். 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் பக்கத்து மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது.

விரைவில் தமிழ்நாட்டில் காமராஜரின் தொண்டன் முதல்வராக வர வேண்டும் அதுவே எனது ஆசை

இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ஜேஎம் ஆருண், ராணி மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, மாவட்ட தலைவர்கள் திரவியம், சிவ ராஜசேகரன், மகேந்திரன், நிர்வாகிகள் சிரஞ்சீவி, ஐடி அரசன்,கராத்தே ரவி, டி.பெனட், ஐயப்பன் டிராவல்ஸ் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Thirunavukkarasar #Congress

Tags:    

Similar News