செய்திகள்
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

Published On 2018-09-20 04:41 GMT   |   Update On 2018-09-20 04:41 GMT
கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 6 மணிக்கு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. #StormWarningCage
கடலூர்:

வடமேற்கு வங்கக்கடலில், கலிங்கப்பட்டனம் என்ற இடத்திலிருந்து, சுமார் 550 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மேலும் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் திடீரென்று உள்வாங்கியது. இதுமட்டுமின்றி நேற்று காலை முதல் மதியம் வரை கடலூரில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது‌.

இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 6 மணிக்கு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. #StormWarningCage



Tags:    

Similar News