செய்திகள்

அதிமுக உறுப்பினர் சீட்டு 8ந்தேதி முதல் வழங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் அறிக்கை

Published On 2018-10-01 08:57 GMT   |   Update On 2018-10-01 08:57 GMT
விண்ணப்பித்தவர்களுக்கு அ.தி.மு.க. உறுப்பினர் சீட்டு 8-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPS
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் கடந்த 29.1.2018 அன்று தொடங்கப்பட்டு, ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி அதற்கான விண்ணப்பப்படிவங்களை 30.6.2018 வரை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்துள்ளதோடு, தொடர்ந்து இளைஞர்களும், இளம் பெண்களும், பொதுமக்களும் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.



அதில், 1.3.2018 முதல் 31.5.2018-ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுள்ள அனைவருக்கும் வருகின்ற 8.10.2018 (திங்கட்கிழமை) முதல் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.

கழக உடன்பிறப்புகள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 1.3.2018 முதல் 31.5.2018-ந் தேதி வரை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து, அதற்கான ரசீதுகளைப் பெற்றுள்ளவர்கள் அதனைக் கொண்டுவந்து காண்பித்து, அந்தந்த ரசீதுகளுக்குரிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, நடைபெற உள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPS

Tags:    

Similar News