செய்திகள்

சூளைமேடு ரவுடி ஜெகன்நாதன் 323 நாட்கள் சிறையில் அடைப்பு

Published On 2018-10-24 11:35 GMT   |   Update On 2018-10-24 11:35 GMT
ஓராண்டுக்கு தவறு செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து அதனை மீறி செயல்பட்டதால் சூளைமேடு ரவுடி ஜெகன்நாதனை 323 நாட்கள் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (42). கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பரிந்துரையின் பேரில் ஓராண்டுக்கு தவறு செய்ய மாட்டேன் என்று திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வ நாகரத்தினத்திடம் எழுதி கொடுத்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி இது தொடர்பான உத்தரவாதத்தை அவர் அளித்திருந்தார்.

இதன் பின்னர் ஜெகன்நாதன் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சிக்கினார். அந்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓராண்டுக்கு தவறு செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தவர் அதனை மீறி செயல்பட்டதால் குற்ற நடைமுறை சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க துணை கமி‌ஷனர் செல்வநாகரத்தினம் முடிவு செய்தார்.

இதன்படி ஓராண்டில் ஜெகன்நாதன் ஒழுங்காக இருந்த காலத்தை கழித்து விட்டு மீதமுள்ள 323 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி புழல் சிறையில் ஜெகன்நாதன் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News