செய்திகள்

சேலம் மாவட்டத்தில் சாரல் மழை

Published On 2018-11-23 05:02 GMT   |   Update On 2018-11-23 05:02 GMT
சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் மழை தூறியபடியே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வோர் அவதி அடைந்தனர். #Rain
சேலம்:

வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.

கடந்த 18-ந் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதி வழியாக உள்ளே நுழைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது.இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள, வட தமிழகத்திலும் மழை பெய்தது.

தற்போது அது வலுவிழந்து உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தம்மம்பட்டி, ஏற்காடு, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சாரல் மழையாக நீடித்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

இன்று காலையும் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் மழை தூறிய படியே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வோர் அவதி அடைந்தனர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காட்டில் 6.6, கரியகோவில் 5, வீரகனூர் 4.8, கெங்கவல்லி 3.4, ஆத்தூர் 3.2, எடப்பாடி 1, மேட்டூர் 0.5, சேலம் மாநகரில் 0.4 என மாவட்டம் முழுவதும் மொத்தமம் 34.9 மி.மீ. மழை பெய்துள்ளது.  #Rain
Tags:    

Similar News