செய்திகள்
காணும் பொங்கல் - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் இன்று காணும் பொங்கலையொட்டி நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் தற்போது பொங்கல் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தற்போது தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இன்று காணும் பொங்கல் என்பதால் குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர். கொடைக்கானலில் கடும் குளிர் நிலவியபோதும் கூட்டம் அலைமோதியது. இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான மோயர்பாயிண்ட், தூண்பாறை, கோக்கர் ஸ்வாக், பைன்பாரஸ்ட், குணாகுகை, பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களில் மக்கள்வெள்ளம் அலைமோதியது.
மேலும் நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகுசவாரி செய்தனர். மேலும் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து சிறுவர்கள் மகிழ்ந்தனர்.
நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இன்றும் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று சீரமைத்தனர். நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.