செய்திகள்
வேலூரில் 3 இடங்களில் ஆசிரியர்களை கண்டித்து பெற்றோர், மாணவர்கள் போராட்டம்
5-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கண்டித்து வேலூரில் 3 இடங்களில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் 5-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்க பள்ளிகள் இதனால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி முன்பு மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜா தாசில்தார் பூமா மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்றனர். வகுப்பறைகள் பூட்டு உடைக்கப்பட்டது. பின்பு தமிழ்த்தாய் வாழ்த்துபாடி மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பினர்.
பேர்ணாம்பட்டு மேல்பட்டி அருகே உள்ள சங்கராபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு இன்று காலை மாணவர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றி விட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு சென்றுவிட்டார்.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் உமராபாத் செல்லும் சாலையில் மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்மொணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே இன்று பணிக்கு வந்தனர். ஆசிரியர்கள் வராததை கண்டித்து பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews