செய்திகள்
செவ்வாய்ப்பேட்டையில் ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் செவ்வாய்ப்பேட்டை சின்னமாறன் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 42). அரசு பள்ளி ஆசிரியையான இவர் மேட்டுப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை ராஜேஸ்வரி டிரைவிங் ஸ்கூலுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டின் அருகே உள்ள உறவினர் ஒருவர் ராஜேஸ்வரிக்கு போன் செய்து வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவையும் உடைத்து அதில் இருந்த 16 பவுன் நகையையும் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ராஜேஸ்வரி செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.