இந்தியா

ஜம்மு காஷ்மீர்: ஞாயிறு சந்தையில் கையெறிகுண்டு தாக்குதல்.. 10 பேர் படுகாயம்

Published On 2024-11-03 10:43 GMT   |   Update On 2024-11-03 10:47 GMT
  • ஞாயிறு சந்தையில் பயங்கரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியுள்ளனர்.
  • இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் வார சந்தையில் கையெறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் அமைத்துள்ள சுற்றுலா மையத்தின் அருகே உள்ள ஞாயிறு சந்தையில் பயங்கரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியுள்ளனர்.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று இந்த தாக்குதலானது நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் முன்பைவிட தற்போது பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக நேற்றைய தினம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News