செய்திகள்
முந்திரி பழம்

நத்தம் சுற்றுவட்டார பகுதியில் முந்திரி பழ சீசன் தொடக்கம்

Published On 2020-05-19 08:07 GMT   |   Update On 2020-05-19 08:07 GMT
நத்தம் சுற்றுவட்டார பகுதியில் முந்திரி பழ சீசன் தொடங்கி உள்ளது. பழங்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்று முந்திரி பழ விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் வேம்பரளி கணவாய்மேடு பகுதி குட்டுப்பட்டி காந்தமலைப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் மா, கொய்யா, பப்பாளி, சப்போட்டா போன்ற பழ வகைகள் விளைச்சல் பெறுகிறது. தற்போது மாம்பழ சீசன் இருந்தாலும் அத்துடன் வருடம் ஒரு முறை பலன் தரும் முந்திரி பழம் அறுவடை சீசன் தற்போது தொடங்கி உள்ளது.

மேலும் 1 கிலோ ரூ.40க்கும், ஒரு கூறு ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்த பழங்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்று முந்திரி பழ விவசாயிகள் கவலையில் உள்ளனர். பஸ் போக்குவரத்து தொடங்கினால் வெளி மாவட்டங்களுக்கு கூடை கூடையாக பழங்களை அனுப்ப வாய்ப்பு இருக்கும். அதுவரை தற்போதைய நிலை தான் இருக்கும். இந்தப் பழமானது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவை கொண்டது.

வறட்சியில் விளைச்சல் தரும் இந்த முந்திரி பழ மரம் தமிழகத்தில் நீர் செழிப்பான பகுதிகளில் ஏராளமாக உள்ளது. முந்திரி விதைகளை அகற்றிவிட்டு பழங்கள் மட்டும் சில்லரை விற்பனைக்கு வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பழ சீசன் ஜூன் முதல் வாரத்தில் முடிவுக்கு வரும். தற்போது சீசனுக்கு வந்துள்ள இந்த பழங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

Similar News