செய்திகள்
திருப்பத்தூரில் தனியார் பஸ்களில் சப்-கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பயணிகளுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார்.
திருப்பத்தூர்:
கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 5-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், அதில் சில தளர்வு செய்து அந்தந்த மண்டலங்களுக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள், கலெக்டரை சந்தித்து தனியார் பஸ்களை இயக்க அனுமதி பெற்றனர். நேற்று முதல் திருப்பத்தூரில் இருந்து 3 தனியார் பஸ்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிக்கு சென்றன. அதேபோல் அங்கிருந்தும் திருப்பத்தூருக்கு தனியார் பஸ்கள் வந்தன.
திருப்பத்தூருக்கு வந்த தனியார் பஸ்களில் 60 சதவீத பயணிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர். முன்னதாக பயணிகள் பஸ்களில் ஏறும்போது கைகளுக்கு சானிடைசர் திரவம் பூசப்பட்டது. முகக் கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பயணிகள் சமூக விலகலை பின்பற்றி அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
திருப்பத்தூருக்கு வந்த தனியார் பஸ்களில் சப்-கலெக்டர் அப்துல்முனீர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கண்டக்டர் மற்றும் டிரைவர்களிடம் சமூக விலகலை கடைப்பிடித்து பயணிகளை ஏற்ற வேண்டும் என்றும், ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பஸ் நிலையத்துக்குள் வரும் பயணிகள், கண்டக்டர்கள், டிரைவர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர், முகக் கவசத்தை வழங்கி பேசினார். ஆய்வின்போது தாசில்தார் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.