செய்திகள் (Tamil News)
மேத்யூ சாமுவேல்

முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு- மேத்யூ சாமுவேல் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Published On 2020-08-19 05:48 GMT   |   Update On 2020-08-19 05:48 GMT
முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புப்படுத்தி ஆவணப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அவதூறு ஆவணப்படம் வெளியிட்டதற்காக ரூபாய் 1.10 கோடி இழப்பீடு கேட்டு முதல்வர் பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்பட 7 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, மேத்யூ சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.





 

Similar News