செய்திகள்
பெருஞ்சாணி அணை

குமரியில் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து

Published On 2020-10-10 06:58 GMT   |   Update On 2020-10-10 06:58 GMT
குமரியில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால், அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதே போல நேற்று காலையும் பல்வேறு இடங்களில் சிறிது நேரம் பலத்த மழை கொட்டியது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழையாக இருந்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாலமோர்-38.4, பேச்சிப்பாறை-3.4, பெருஞ்சாணி-30.2, சிற்றார் 1-22, சிற்றார் 2-36, மாம்பழத்துறையாறு-1.4, நாகர்கோவில்-1.8, பூதப்பாண்டி-1.4, சுருளோடு-27.6, கன்னிமார்-8.2, இரணியல்-8.2, ஆனைகிடங்கு-2.2, குளச்சல்-6.2, குருந்தன்கோடு-3.2, அடையாமடை-11, முள்ளங்கினாவிளை-4, புத்தன்அணை-29.6, திற்பரப்பு-7 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 495 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு 629 கனஅடி தண்ணீர் வந்தது. அதே சமயம் பெருஞ்சாணி அணையில் இருந்து 250 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 100 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது.

Similar News