செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 3107 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-01-29 01:47 GMT   |   Update On 2021-01-29 01:47 GMT
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 3,107 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்:

நாடு முழுவதும் கடந்த 16-ந்் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 17 மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசு அறிவித்தபடி சுகாதார பணியாளர்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்காக 9,760 தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தினசரி 100 பேருக்கு ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியில் எதிர்பார்த்த வேகம் இல்லை. முன்பதிவு செய்திருந்த சுகாதார பணியாளர்கள் கூட உடனடியாக தடுப்பூசி போடுவதற்கு முன்வராத நிலையில் உள்ளது. இதுவரை ஏழு மையங்களில் 3,107 பேருக்கு மட்டுமே தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. சராசரியாக தினசரி 250 முதல் 275 பேருக்கு மட்டுமே 7 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டபடி 10 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போட முன்வரும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய நிலை உள்ளதால் முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமாகும். இதனைத்தொடர்ந்தே அடுத்த கட்டமாக தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் எதிர்பார்க்கும் வேகம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மத்திய அரசு தமிழகத்தில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளநிலையில் மாவட்டங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

Similar News