செய்திகள் (Tamil News)
நாவல் மரம்

ஒட்டு ரக நாவல் மரம் வளர்க்கும் விவசாயிகள்

Published On 2021-07-02 07:54 GMT   |   Update On 2021-07-02 07:54 GMT
உள்ளூர் வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளதால் நாவல் பழங்களை பிற மாநிலங்களில் இருந்து தருவித்து உடுமலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
உடுமலை:

உடுமலை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நாவல் மரங்கள் அதிகளவு முன்பு இருந்தன.பல்வேறு காரணங்களால் இவ்வகை மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் தற்போது நாவல் பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் உட்பட பல தரப்பினரும் நாவல் பழங்களை விரும்பி உண்கின்றனர்.

இந்நிலையில் உள்ளூர் வரத்து முற்றிலுமாக குறைந்துள்ள நிலையில்  ஆந்திராவில் இருந்து நாவல் பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. 

தற்போது உடுமலை நகரில் கிலோ ரூ.200க்கு இப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களில்  ஒட்டு ரக நாவல் பழ மரங்களை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ரகங்களில் பழங்கள் சதை திரட்சியுடன் இருக்கும்.எனவே இவ்வகை மரக்கன்றுகளை தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்கினால் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Similar News