செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்.

கடன் மறுசீரமைப்பு திட்டம்-நிதி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு

Published On 2021-07-25 08:16 GMT   |   Update On 2021-07-25 08:16 GMT
அவசரகால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எம்.எஸ்.எம்.இ.,க்களுக்காக, ரூ.2.73 லட்சம் கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

கொரோனா இரண்டாவது அலையால் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.,) வழங்கப்பட்ட, கடன் மறுசீரமைப்பு சலுகை வாய்ப்பை 13.06 லட்சம் எம்.எஸ்.எம்.இ.,க்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

இதன்மூலம், ஜூன் 25-ந் தேதி வரை ரூ.55,333 கோடிக்கான கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நிறுவனங்கள் பலவும் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொண்டுள்ளன என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2-ந்தேதி வரை அவசரகால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எம்.எஸ்.எம்.இ.,க்களுக்காக, ரூ.2.73 லட்சம் கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ரூ. 4.5 லட்சம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், ‘தனிநபர் மற்றும் தொழில் துறையினர் மேம்பாட்டுக்காக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சிறப்பு கடன் திட்டங்கள், கடன் சீரமைப்பு திட்டங்கள் வங்கிகள் மற்றும் அனைத்து நுண் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். 

கடனை மீளப்பெறுவதில் கனிவான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். எந்தவித புகாருக்கும் இடம்தராமல் வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News