செய்திகள் (Tamil News)
மழை

தருமபுரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

Published On 2021-09-02 05:40 GMT   |   Update On 2021-09-02 05:40 GMT
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 4.23 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது.
தருமபுரி:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய விடாமல் கொட்டித் தீர்த்தது. தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இதில் அரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அரூர் - 14
பாலக்கோடு-9
மாரண்டஅள்ளி-2
பென்னாகரம்-2
தருமபுரி-3

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 4.23 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது.

Similar News