செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

அவசர கால கடன் திட்டம் நீட்டிப்பால் திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

Published On 2021-10-01 08:34 GMT   |   Update On 2021-10-01 08:34 GMT
கடன் வழங்குவதற்காக ரூ 4.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2.85 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

அவசர கால கடன் திட்டம் வரும் 2022-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனால் ஆயத்த ஆடை உற்பத்தி உட்பட பல்வேறுவகை தொழில் நிறுவனங்கள் மிக கடுமையான நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டன.

பாதிப்புகளில் இருந்து நிறுவனங்கள் மீள்வதற்காக மத்திய அரசு அவசர கால கடன் திட்டத்தை (இ.சி.எல்.ஜி.எஸ்.,) கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் நிறுவனங்களுக்கு பிணையமின்றி கடன் வழங்குவதற்காக ரூ.4.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2.85 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ.1.65 லட்சம் கோடி கடன் வழங்க, 2022 மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நிதி சார் நெருக்கடிகள் விலகும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Similar News