செய்திகள் (Tamil News)
கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதையும், தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப்பதையும் படத்தில் காணலாம்.

உடுமலை கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.70 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2021-10-01 10:13 GMT   |   Update On 2021-10-01 10:13 GMT
தீயணைப்பு அதிகாரி அரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உடுமலை:

உடுமலையை அடுத்த தளியை சேர்ந்தவர் சரவணக்குமார் ( வயது 35). இவர் தென்னை உரி மட்டைகளை வாங்கி கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னை உரிமட்டைகளை வாங்கி வந்து கயிறு தயாரித்து விற்பனைக்காக குவித்து வைத்திருந்தார். 

இந்தநிலையில் மில்லில் குவித்து வைக்கப்பட்டிருந்த கயிறுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து அருகில் இருந்த விவசாயிகள் சரவணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  

தீயணைப்பு அதிகாரி அரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு  வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.பின்னர் கயிறுகளில் பற்றி எரிந்த தீயை 5 மணி நேரம் போராடி அணைத்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 70 லட்சம் மதிப்பிலான கயிறுகள்
எரிந்து சாம்பலாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Similar News