செய்திகள்
மழை

சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கனமழை

Published On 2021-11-10 19:32 GMT   |   Update On 2021-11-10 19:36 GMT
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி உருவானது.

தற்போது காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக மாறி இன்று கரையை கடக்கிறது. இதனால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே பல சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News