செய்திகள் (Tamil News)
டிராக்டர் மூலம் வயலில் உழவுப்பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

வள்ளியரச்சல் பகுதியில் நாற்றங்கால் தயார் செய்யும் விவசாயிகள்

Published On 2021-11-15 05:40 GMT   |   Update On 2021-11-15 10:09 GMT
44வது மைலில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு மீண்டும் செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே வள்ளியரச்சல், குழலிபாளையம், நடுப்பாளையம், மாந்தபுரம், மங்கலப்பட்டி ஆகிய பகுதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்கிறது.

கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடைமடை வரை வருவதற்கு 10 நாட்களுக்கு மேல் ஆனது. மேலும் 44வது மைலில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு மீண்டும் செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் ததும்பி செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வள்ளியரச்சல் பகுதியில் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்தும், ஒரு சிலர் நெல் நடவும் செய்துள்ளனர்.
Tags:    

Similar News